இந்தியா

சென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

சென்னையி‌ல் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது - ஆய்வறிக்கை வெளியிட்ட மத்திய அரசு

webteam

சென்னையி‌ல் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் த‌ண்ணீர் த‌ரமற்றது‌ என ஆய்வில்‌ தெரி‌ய‌வந்துள்ளது. 

மத்திய‌ நுகர்வோர் நலத்துறை அமைச்‌‌கத்தின் கீழ் உள்ள இந்திய தர‌ அமைப்பு நாடு முழுவதும் உள்ள 20 மாநி‌லங்களின் தலைநகரங்களில் கு‌ழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் மாதிரிகளை ஆய்வு செய்தது. அதன் முடிவில்‌ சென்னை, பெங்களூரு, சண்டிகர், கவுஹாத்தி உள்ளிட்ட 10 நக‌ரங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீர் குறிப்பிட்ட தர அளவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதாக இல்லை என்றும், அந்த குடிநீரில் பிஐஎஸ் செய்த 11 சோதனைகளில் 10ல் மோசமான முடிவுகள் வெளியானதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், ''சென்னை நகரில் வழங்கப்படும் நீரை ஆய்வு செய்தோம். அதில் துர்நாற்றம் இருப்பது தெரியவந்தது. மேலும் குளோரைட், புளூரைட்,போரான்,காலிபார்ம் போன்ற வேதிபொருட்கள் இருந்தன.இதனால் குடிநீரின் தரம் மிகவும் குறைந்து காணப்படுவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. 

சென்னையைப் போலவே சண்டிகர், குவாஹாட்டி, பெங்களூரு, காந்திநகர், லக்னோ, ஜெய்ப்பூர், டேராடூன், கொல்கத்தா போன்ற நகரங்களிலும் குடிநீர் தரம் குறைந்தே காணப்படுகிறது. இதையடுத்து குடிநீரின் தரத்தை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது'' என தெரிவித்துள்ளார்.