இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பீகாரில் கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இடஒதுக்கீடு சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்வகுப்பினருக்கான 10 சதவீதத்தையும் சேர்த்து, பீகாரில் 75 சதவீத இட ஒதுக்கீடு அமலானது.
இதற்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், அரசின் 2 திருத்தச் சட்டங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாக சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.