மழை, வெள்ளத்தினால் கேரள மக்களின் பாஸ்போர்ட் சேதமடைந்திருந்தால், புதிய பாஸ்போர்ட் எந்தவிதக் கட்டணமுமின்றி வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் கனமழை காரணாக எதிர்பாராவிதமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலைமை சீரான உடன், வெள்ளத்தால் பழுதடைந்த பாஸ்போர்ட்களை, எந்தவிதக் கட்டணமுமின்றி மாற்றித் தர முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவர்களுக்கான பாஸ்போர்ட் முகாம்களை அணுகுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.