இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

Veeramani

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைய இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை 19ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தன. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்திய நிலையில் அது நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூடிய விஷயமல்ல எனக் கூறி அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இதனால் மழைக்கால கூட்டத்தொடரே முடங்கிப் போனது. அவை கூடுவதும் கூச்சல் குழப்பம், ஏற்பட்டு ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாக இருந்து. இந்த அமளிக்கு மத்தியில் பல்வேறு மசோதாக்களை அரசு நிறைவேற்றியது.

குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை முடிவு செய்யும் அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கே அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மட்டும் எதிர்க்கட்சிகளின் முழு பங்களிப்புடன் நிறைவேறியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 13ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் தொடர் அமளியால் முன்னதாகவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.