நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 15ம் தேதி முதல் நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத் தொடரின்போது முத்தலாக் முறைக்கு எதிரான மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் தாக்கலாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அதேவேளையில், ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆண்டுதோறும் நவம்பர் 3ஆவது வாரத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவது வழக்கம். இந்த முறை அது தள்ளிப் போயுள்ளது.