இந்தியா

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

பரபரப்பான சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

Rasus

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

முதல் நாளான இன்று, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவை ஒத்திவைக்கப்படும். குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் 23 சட்டமுன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவு, மோட்டார் வாகன சட்டத்திருத்த முன்வடிவு போன்றவையும் இதில் அடங்கும். இவை தவிர புதிதாக 20 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

உர்ஜித் படேல் ராஜினாமா, ரபேல் போர் விமான ஒப்பந்தம், சி.பி.ஐ. சர்ச்சை, ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழக எம்.பி.க்கள் மேகதாது மற்றும் கஜா புயல் நிவாரணம் ஆகிய பிரச்னைகளை எழுப்புவார்கள் எனத் தெரிகிறது.