இந்திய அமைச்சருக்கு உள்ள துணிச்சல் கூட பாகிஸ்தான் பிரதமருக்கு இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீண்டும் இந்தியாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
பாகிஸ்தான் லாகூரில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், இந்திய வெளியுறவு அமைச்சருக்கு உள்ள துணிச்சல் பாகிஸ்தான் பிரதமருக்கு இல்லை என்று கூறினார். மேலும் அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக இந்தியா இருக்கும் பட்சத்திலும் அந்நாடு விதித்த தடையை மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை தள்ளுபடி விலையில் இந்தியா பெறுவதாக குறிப்பிட்ட இம்ரான்கான், நாட்டு மக்களின் நலன் சார்ந்தே சர்வதேச முடிவுகளை இந்தியா எடுத்துவருவதாக தெரிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காதீர்கள் என அமெரிக்க தரப்பில் கூறியதற்கு, நீங்கள் யார் அதைச் சொல்ல? என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேட்கும் வீடியோவையும் பொதுக்கூட்டத்தில் மக்களிடம் போட்டுக் காட்டினார் இம்ரான்கான்.
இந்நிலையில் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உள்ள துணிச்சல் கூட பாகிஸ்தான் பிரதமருக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.