இந்தியா

காஷ்மீரில் கட்டுக்கட்டாக பாக். கரன்ஸி!

காஷ்மீரில் கட்டுக்கட்டாக பாக். கரன்ஸி!

Rasus


காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு ஆகிய ஊர்களில் உள்ள பிரிவினைவாத அமைப்புகளின் தலைவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வுத் முகமை அதிகாரிகள் திடீர் ஆய்வை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கிடமான பல வங்கிக் கணக்கு தகவல்கள் கிடைத்ததுடன் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் பணத்தாள்களும் கட்டுக்கட்டாகச் சிக்கின. 
டெல்லி அருகே குருகிராமிலும் இச்சோதனைகள் நடத்தப்பட்டன. பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற தகவலின் அடிப்படையில் இச்சோதனைகள் நடத்தப்பட்டன. காஷ்மீர், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட 29 பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாகவே நேற்றும் சோதனைகள் நடத்தப்படன. சோதனைகளில் இதுவரை 2 கோடி ருபாய்க்கும் அதிகமாக ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. 
லஸ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் லெட்டர்பேட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.