இந்தியா

இந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு

இந்திய எல்லைக்குள் வந்த பாக். உளவு விமானம் விரட்டியடிப்பு

webteam

இந்திய எல்லைக்குள் இன்று மீண்டும் வந்த பாகிஸ்தானின் ஆளில்லாத உளவு விமானம் பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் விரட்டி யடிக்கப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடந்த்தியது. இதில் பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து எல்லைப் பகுதியில் பாகிஸ்தான், அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் அதற்கு சரியான பதிலடி கொடுத்துவருகி றது. அவ்வப்போது உளவு விமானங்களையும் இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. அப்படி வந்த இரண்டு உளவு விமா னங்களை இந்திய பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் ஸ்ரீரங்காநகர் அருகிலுள்ள ஹிந்துமால்கோட்டில் பாகிஸ் தானின் உளவு விமானம் நுழைந்தது. இதைக் கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் சரமாரியாகத் தாக்குதலைத் தொடுத்தனர். இதையடுத்து அது பாகிஸ்தானை நோக்கி திரும்பிச் சென்றுவிட்டது.