இந்தியா

கேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆக.26 முதல் பக்தர்களுக்காக திறப்பு

கேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆக.26 முதல் பக்தர்களுக்காக திறப்பு

Veeramani

கேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், அவர்கள் சன்னதிக்கு வரும்போது அசல் ஆதார் அட்டையையும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது. பக்தர்கள் சன்னதிக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக “spst.in” என்ற கோயில் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், அதன் நகலை வைத்து  பயணத்தின் போது அவர்களுடன் அசல் ஆதார் அட்டையையும் எடுத்துச் செல்லவேண்டும்.

பக்தர்கள் முகமூடிகளை அணிய வேண்டும், கோயிலுக்குள் செல்வதற்கு முன்பு சோப் மற்றும் சானிடைசரால் கைகளைக் கழுவினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் மாலை 6.45 மணி வரையிலும் திறந்திருக்கும்  என்று கோயில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டத்திலும் 35 பக்தர்கள் மட்டுமே சன்னதிக்குள் அனுமதிக்கப்படுவார்கள், ஒரு நாளைக்கு அதிகபட்சம் 665 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிர்வாக அதிகாரி வி ரத்தீஷன் தெரிவித்தார்.