vijayakanth PT
இந்தியா

கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு.. தமிழகத்தில் யார் யாருக்கு விருதுகள்?

நடப்பு ஆண்டில் பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரத்தை பார்க்கலாம்

PT WEB

செய்தியாளர் - விக்னேஷ்முத்து

கலை, சமூகப் பணி தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. அதன்படி, மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உட்பட பலருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த்

பத்ம விருதுகளில் 132 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த வைஜெயந்திமாலா, பத்மா சுப்ரமணியம், பத்திரப்பன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்ம விருது அறிவிக்கப்பட்ட விவரங்களை பார்க்கலாம். பத்ம பூஷண் விருதுக்கு தேர்வானவர்கள்.

விஜயகாந்த் - கலை(தமிழகம்)

ஃபாத்திமா ஃபீவி - பொது விவகாரங்கள்(கேரளா)

ஹோர்முஸ்ஜி - இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா)

மிதுன் சக்ரவர்த்தி - கலை(மேற்கு வங்கம்)

சீதாராம் ஜிண்டல் - வர்த்தகம் மற்றும் தொழில் துறை(கர்நாடகா)

யங் லியு - வர்த்தகம் மற்றும் தொழில் துறை(தைவான்)

அஷ்வின் பாலசந்த் மேத்தா - மருத்துவம்(மகாராஷ்டிரா)

சத்யபிரதா முகர்ஜி - பொது விவகாரங்கள்(மேற்கு வங்கம்)

ராம் நாயக் - பொது விவகாரங்கள்(மகாராஷ்டிரா)

தேஜஸ் மதுசூதன் படேல் - மருத்துவம்(குஜராத்)

ராஜகோபால் - பொது விவகாரங்கள்(கேரளா)

தத்தாத்ரே அம்பாதாஸ் - கலை(மகாராஷ்டிரா)

டோக்டன் ரின்போச்சே - ஆன்மிகம்(லடாக்)

பியாரேலால் சர்மா - கலை(மகாராஷ்டிரா)

சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர் - மருத்துவம்(பீகார்)

உஷா உதுப் - கலை(மேற்கு வங்கம்)

குந்தன் வியாஸ் - இலக்கியம் மற்றும் கல்வி(மகாராஷ்டிரா)

பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வானவர்கள்

வைஜெயந்திமாலா - கலை(தமிழகம்)

பத்மா சுப்ரமண்யம் - கலை(தமிழகம்)

சிரஞ்சீவி - கலை(ஆந்திரா)

வெங்கையா நாயுடு - பொது விவகாரங்கள்(ஆந்திரா)

பிந்தேஷ்வர் பதக் - சமூக சேவகர்(பீகார்)

பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வானவர்கள்

ஜோஷ்னா சின்னப்பா - விளையாட்டு(தமிழகம்)

ஜோ டி குரூஸ் - இலக்கியம் மற்றும் கல்வி(தமிழகம்)

ஜி. நாச்சியார் - மருத்துவம்(தமிழகம்)

சேசம்பட்டி டி.சிவலிங்கம் - கலை(தமிழகம்)

உள்ளிட்ட சுமார் 110 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் பிந்தேஷ்வர், ஃபாத்திமா ஃபீவி, சத்யபிரதா முகர்ஜி, டோக்டன் ரின்போச்சே, விஜயகாந்த் உள்ளிட்ட ஐந்து பேருக்கு அவர்களது மறைவுக்கு பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.