இந்தியா

காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: ப.சிதம்பரம் விமர்சனம்

காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா: ப.சிதம்பரம் விமர்சனம்

webteam

காஷ்மீர் ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளதை பிரதமர் மோடியின் மோசமான ஆட்சி மீதான குற்றச்சாட்டாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷா பைசல் (35). 2009-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். காஷ்மீர் மாநில இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த இவர், அந்த மாநிலத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர். இவர் தனது முக நூலில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

’’காஷ்மீரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்துவருகிறது. அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மக்க ளின் நலன் கருதி, ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மேலும் விளக்கம் அளிக்க உள்ளேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதை பிரதமர் மோடியின் மோசமான ஆட்சி மீதான குற்றச்சாட்டாகவே பார்க்க வேண்டியுள்ளது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.  கடுங்கோபத்தில் அந்த அதிகாரி ராஜினாமா செய்ததை உலகம் நிச்சயம் கவனத்தில் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.