இந்தியா

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமியை விட மோசமானது: ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சுனாமியை விட மோசமானது: ப.சிதம்பரம்

Rasus

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமியை விட மோசமானது என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தின் நிலை என்ற தலைப்பில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிதம்பரம், தாம் நிதியமைச்சராக இருந்தபோது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி பிரதமர் கூறியிருந்தால் பதவி விலகியிருப்பேன் என கூறினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமியை விட மோசமானது என விமர்சித்த அவர், ஜிஎஸ்டி நல்லதுதான் என்றபோதிலும் அவசர கதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜிஎஸ்டியின் கீழ் அதிகபட்ச வரி 18 சதவீதமாக இருக்கவேண்டும் எனவும் சிதம்பரம் கருத்து தெரிவித்தார். புல்லட் ரயில் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, ரயில்களின் பாதுகாப்பு, தூய்மை உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளித்திருக்கவேண்டும்
எனவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.