இந்தியா

நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம் 

நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை: ப.சிதம்பரம் 

webteam

இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5% ஆக குறையும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொருளாதார விவகாரங்களில் பாஜக ஒன்றன் பின் ஒன்றாக தவறு செய்தே வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும். நாட்டின் பொருளாதாரம் குறித்து மோடி பேசுவதே இல்லை.

எனது பதிவும் எனது மனசாட்சியும் முற்றிலும் தெளிவாக உள்ளன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள். குற்றமற்ற அரசியல் தலைவர்களை சிறை வைத்திருப்பதை பற்றி பெரிதும் கவலைப்படுகிறேன். நமக்கான சுதந்திரத்தை காக்க வேண்டுமென்றால் சிறை வைக்கப்பட்ட தலைவர்களுக்காக போராட வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, உள்ளிட்டவைகளால் இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.