மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கவரி கிடையாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு கூறியதாவது, “ மருத்துவ ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அடுத்த 2 மாதங்களுக்கு சுங்கவரி கிடையாது. மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கபடும். ஆம்புலன்ஸ் போலவே ஆக்சிஜனை எடுத்துச்செல்லும் வாகனங்களும் அவசர மருத்துவ வாகனங்களாக கருதப்படும்” என்று மத்திய அரசு கூறியுள்ளது.
முன்னதாக, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் கேரிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவ பிரதமர் உத்தரவிட்டார். நைட்ரஜன் ஆலைகளையும் ஆக்சிஜன் ஆலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.