இந்தியா

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தீவிரம்

jagadeesh

கொரோனா நோயாளிகளுக்காக விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆந்திராவிற்கு தேவையான ஆக்ஸிஜனை இருப்பு வைக்கவும் அண்டை மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு உத்தரவுப்படி ஆக்ஸிஜனை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் மொத்தமுள்ள ஐந்து ஆக்ஸிஜன் பிளாண்ட்கள் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 2,800 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளுக்காக விசாகப்பட்டினத்தில் இருந்து 150 டன் ஆக்ஸிஜனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக விசாகப்பட்டினம் வந்துள்ள ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய்சந்த் தெரிவித்துள்ளார்.