இந்தியா

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்: 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு தேர்வு

பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்: 92 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு தேர்வு

jagadeesh

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களான பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல்-லிருந்து இதுவரை 92 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் மொத்தமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் பணிபுரியும் நிலையில், ஒரு லட்சம் பேர் விருப்ப ஓய்வை தேர்ந்தெடுப்பார்கள் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. டிசம்பர் 3-ஆம் தேதி வரை விருப்ப ஓய்வு திட்டத்தை தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

சுமார் 70 முதல் 80 ஆயிரம் பேர் வரை விருப்ப ஓய்வை தேர்ந்தெடுத்தால் 7 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளத்தை சேமிக்க முடியும் என அந்நிறுவனம் கருதுகிறது. இந்நிலையில், இரண்டு நிறுவனங்களிலும் சேர்த்து மொத்தமாக 92 ஆயிரம் பேர் இதுவரை விருப்ப ஓய்‌வை தேர்ந்தெடுத்துள்ளதாக த‌கவல்கள் வெளியாகியுள்ளன.