இந்தியா

ராணுவத்தில் மூன்று வாரங்களில் 5 மடங்காக உயர்ந்த கொரோனா: சிகிச்சையில் 5000 வீரர்கள்

ராணுவத்தில் மூன்று வாரங்களில் 5 மடங்காக உயர்ந்த கொரோனா: சிகிச்சையில் 5000 வீரர்கள்

webteam

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை ராணுவத்தினர் இடையே வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 1,067 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்த நிலையில், மே10 ஆம் தேதி நிலவரப்படி 5,134 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 5,000 ராணுவ வீரர்கள் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் கடந்த மூன்று வாரத்தில் ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலையில் 133 இராணுவ வீர்ர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்தியாவில் நேற்று 3.29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 82 குணமடைந்தனர்.

தகவல் உறுதுணை: hindustantimes.com