இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு, இந்தாண்டில் முதன்முறையாக 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியபோது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்தியா முழு பொதுமுடக்கத்தில் இருந்தது. செப்டம்பர் மாதத்தில் உச்சம் தொட்ட நிலையில், நோய் பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 26,490 பேர் குணமடைந்த நிலையில், 251 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 17 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
மூன்று லட்சத்து 95 ஆயிரம் பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 5 கோடியே 31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.