நாடு முழுவதும் 4 கோடியே 20லட்சம் பேர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,இதுவரை எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4கோடியே 20லட்சம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தடுப்பூசி போட தகுதியான 94கோடி மக்களில் 4.5% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டுள்ளனர்.
45வயதிற்கு மேற்பட்ட 34சதவிகிதம் பேரும், 60வயதிற்கு மேற்பட்ட 42 சதவிகிதம் பேரும் முதல் டோஸ் தடுப்பூசி தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 18 முதல் 44 வயதிற்குள் இருப்பவர்களில் 5 சதவிகிதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தை பொருத்த மட்டில், இதுவரை 79 லட்சத்து 14ஆயிரம் பேர் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
அதில், 59 லட்சத்து 26ஆயிரம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 14 லட்சத்து 48ஆயிரம் பேர் 2டோஸ் தடுப்பூசியையும் போட்டுக் கொண்டனர். நேற்று ஒரே நாளில், தமிழகத்தில் 2லட்சத்து 64ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.