இந்தியா

"தன் பாலின திருமணங்களை நம் சமூகமும் கலாசாரமும் எப்போதும் ஏற்காது" மத்திய அரசு வழக்கறிஞர்

"தன் பாலின திருமணங்களை நம் சமூகமும் கலாசாரமும் எப்போதும் ஏற்காது" மத்திய அரசு வழக்கறிஞர்

jagadeesh

தன் பாலின திருமணங்களை நம்முடைய சமூகம் எப்போதும் ஏற்காடு என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்து திருமண சட்டத்தில் தன் பாலின திருமணத்தை சேர்க்க வேண்டும் என்ற வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை டெல்லி உயர்நீதிமன்றம் கேட்டிருந்தது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மெகதா "இதுபோன்ற திருமணங்களை ஏற்கெனவே இருக்கும் சட்டத்தில் இணைப்பது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் நம்முடைய கலாசாரமும் சமுதாயமும் தன்பாலின திருமணங்களை ஏற்றுக்கொள்வதில்லை" என தெரிவித்தார்.

எனினும் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் அமர்வில் அவர் தெரிவித்தார். இது குறித்து இந்துஸ்தான் டைமைஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்த துஷார் மெகதா "அனைத்து நாடுகளிலும் திருமண சட்டங்கள் இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் தவறான உறவுகளுக்கு தடையும் இருக்கிறது. அதேபோல கணவன், மனைவி உறவு ஏற்படுவதற்கு சில வயது வரம்பும் இருக்கிறது. தன் பாலின உறவில் கணவன் மனைவி உறவுகளை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்" என்றார்.

மேலும் "சட்டத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதில் நீதிமன்றத்தில் செய்ய முடியாது. தற்காலிகமாக இந்து திருமண சட்டத்தை தன் பாலின திருமணத்துக்கு எந்தவொரு வழிவகையும் செய்ய முடியாது. இதைத்தான் மத்திய அரசு சார்பில் நான் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தேன்" என்றார் துஷார் மெகதா.