கர்நாடகா முகநூல்
இந்தியா

கர்நாடகா | "அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வேண்டும்" - காங்கிரஸ் தலைமை உத்தரவு!

கர்நாடகா அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தரும்டி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

கர்நாடகா அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தரும்டி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி அமைச்சரவை மாற்றியமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடா நில ஒதுக்கீடு வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்த பின், காங்கிரஸ் மேலிடம் உஷாராகி உள்ளது. அமைச்சர்களின் செயல்பாடு குறித்து அறிக்கை கொடுங்கள் என்று, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.

இதனால், அமைச்சர்கள் மாற்றப்படுவார்கள் என செய்திகள் பரவி வருகின்றன. சட்டவிரோதமாக மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளன. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சியினர் வலியுறுத்துகின்றனர். ஆனால் சித்தராமையா பதவி விலக மறுப்பு தெரிவித்தனர். ஆனாலும், பிளான் பியை செயல்படுத்த, மேலிடம் முடிவு செய்து உள்ளதாக தெரிகிறது.

அதாவது சித்தராமையாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்கவும், மேலிட தலைவர்கள் ஆலோசித்து வருவதாகசொல்லப்படுகிறது. முதல்வர் பதவிக்கு துணை முதல்வர் சிவகுமார், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வரிசைகட்டி நிற்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்ற, சதீஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்து, முதல்வர் பதவிக்கு, 'துண்டு' போட்டு வந்துள்ளார்.

இதன்மூலம் சித்தராமையா எந்த நேரத்திலும் பதவியில் இருந்து இறக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கூடிய விரைவில் மேலிட தலைவர்களை, பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கவும், ராகுல் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.