Yeddyurappa pt desk
இந்தியா

"காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடுவதா?.. கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல" - எடியூரப்பா

காவிரியில் மேலும் தண்ணீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல என்று முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

webteam

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இடையே மிக நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. தற்போது மழைநீர் பற்றாக்குறைவால் தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகாவும், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசு சட்டப்போராட்டத்தை முழுவீச்சில் தமிழ்நாடு அரசும் மேற்கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் இரு மாநிலங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் இந்த பிரச்னை மிகத் தீவிரமாகவே கையிலெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா, தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”தமிழகத்திற்கு மேலும் தண்ணீர் திறக்கும்படி காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இது கர்நாடகம் மீது எழுதப்பட்ட மரண சாசனம்.

X page

தமிழகத்திற்கு மேலும் காவிரி நீரை திறந்தால் அது கர்நாடகத்தின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும். கர்நாடக அரசின் அலட்சிய போக்கால் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. வறட்சிக்கு மத்தியிலும் தமிழகத்திற்கு ஏற்கனவே கூடுதல் நீர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையை காங்கிரஸ் அரசு இழந்துவிட்டது. காங்கிரஸ் அரசு மக்களின் பொறுமையை சோதிப்பது சரியல்ல” என பதிவு செய்துள்ளார்.