இந்தியா

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்

Sinekadhara

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே அனுப்பமுடியும்.

1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே, சுய விண்ணப்பம் உள்ளிட்ட விண்ணப்பம்/பரிந்துரைகளை செய்யுமாறு அனைத்து மக்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.