ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவிலும் விசாரணை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
பிரான்ஸிலிருந்து இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்களை 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக புலனாய்வு மேற்கொண்ட பிரான்ஸைச் சேர்ந்த மீடியா பார்ட் என்ற வலைத்தளம் கடந்த இரண்டு மாதங்களாக பல நிதி முறைகேடுகளை அம்பலப்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் அரசும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிலும் விசாரணை நடத்தவேண்டிய நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார், மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.