இந்தியா

நோட்டா முறைக்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் அமளி

நோட்டா முறைக்கு எதிர்ப்பு - எதிர்க்கட்சிகள் அமளி

webteam

மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவில் நோட்டா முறையை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. சட்டத்திருத்தம் எதுவும் செய்யாமலேயே நோட்டா முறையை எப்படி கொண்டு வரலாம் எனக் கூறி காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா குரல் எழுப்பினார். குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிக்கை வெளியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.