இந்தியா

எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர்: பிரதமர் மோடி

jagadeesh

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கின்றனர் என பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கூட்டத்தில் பேசினார்.

மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா தாக்கலாகிறது. இதுதொடர்பாக பாஜக எம்.பி.களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய மோடி, குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

மேலும் மதரீதியாக நசுக்கப்படும் மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக இது அமையும் எனவும் மோடி தெரிவித்தார். அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் குறித்து விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளைக் கேட்டு நிதியமைச்சகத்துக்கு தெரிவிக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.