45வது சென்னை புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வோர் இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் புத்தக கண்காட்சிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தற்போது தொடங்கி உள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 16ம் தேதி தொடங்கி மார்ச் 6ஆம் தேதி வரை 19 நாட்கள் நடைபெற உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக புத்தக கண்காட்சிக்கு கலந்து கொள்வோர் ஆன்லைன் முன்பதிவு செய்து அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டிக்கெட் முன்பதிவு bapasi.com என்கிற இணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு பத்து ரூபாய் டிக்கெட் வீதம் 19 நாட்கள் பதிவு செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் போது நேரில் வந்தும் அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என பபாசி தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: அன்று தோனி.. இன்று தினேஷ் பானா.. உலகக்கோப்பையில் சிக்ஸர் விளாசி வெற்றி - வைரலாகும் போட்டோ