இந்தியா

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்

webteam

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மீறுவதாகவும் முறையற்ற வகையில் பொருட்களுக்கு விலை நிர்ணயித்து ஆதாயம் அடைவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட்டின் செயல் மூலம் இந்தியாவில் கோடிக்கணக்கான சில்லறை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார்.

வரும் 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்கள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.