இந்தியா

ஆன்லைன் மூலம் 350 படிப்புகள்

webteam

வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், மாணவர்கள் புதுமை படைக்கும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் எனவும், உயர்கல்வி தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் அறிவியலில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதியமுறையை உருவாக்க திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார். அதுமட்டிமின்றி, வரும் ஆண்டில் ஆன்லைன் மூலம் 350 படிப்புகள் வழங்கப்படும் எனவும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.