இந்தியா

ஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் !

ஜாமின் இல்லாததால் போலீஸில் சரணடைந்த கேரள பாதிரியார் !

webteam

பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாதிரியார்களுக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்ததையடுத்து ,பாதிரியார் ஜாய் மேத்யூ என்பவர் காவல் நிலைத்தில் சரணடைந்தார். 

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள பாதிரியார் மற்றும் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு முன்பு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ  வெளியாகின. 

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சூழலில் ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துயிருந்தனர்.

அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா விஜயராகவன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் பாதிரியார் மேத்யூ, என்பவர் கொல்லம் காவல்நிலைத்தில் சரணடைந்தார். அவரிடம் இந்த வழக்கு குறித்து போலீஸ்சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.