இந்தியா

ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம் : பட்ஜெட் 2019

ஒரே நாடு ஒரே மின்சார தொகுப்பு திட்டம் : பட்ஜெட் 2019

webteam

மத்திய பட்ஜெட்டில் நாடுமுழுவதும் ஒரே நாடு ஒரு மின்சார விநியோக தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர், “2022 ஆம் ஆண்டு அனைத்து ஊரக பகுதியில் வசிக்கும் குடும்பங்களும் வீடு பெற்றிருப்பார்கள். அடுத்த கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள ஏழை எளியவர்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும்.

2022 அதாவது 75 ஆவது சுதந்திர தின விழா ஆண்டின் பொழுது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரக குடும்பங்களும் முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்றிருப்பார்கள்ஒரு நாடு ஒரு மின்சார விநியோக தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்