இந்தியா

கும்பலாக யோகா செய்வது நோய் தெரியாமல் மருந்து கொடுப்பது போன்றது

கும்பலாக யோகா செய்வது நோய் தெரியாமல் மருந்து கொடுப்பது போன்றது

webteam

கும்பலாக யோகா செய்வது, மருத்துவ முகாம் அமைத்து வருகின்ற எல்லோருக்கும் ஒரே வகையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங், மாஸ் யோகா என்று சொல்லப்படுகிற கும்பலாக யோகா செய்வது மருத்துவ முகாம் அமைத்து யாரையும் பரிசோதனை செய்யாமல், ஒருவருக்கு அந்த மருந்து சேருமா சேராதா என்று கூடத் தெரியாமல் ஒரே வகையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பது போன்றது என்றும், யோகாசனங்கள் ஒவ்வொரு தனிமனிதனின் உடல்நிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு செய்ய வேண்டியது; இப்படி கும்பலாக யோகா செய்வது உடலுக்கு நல்லதல்ல; இதைத்தான் நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தான் ஒரு மருத்துவர் மற்றும் யோகா பயிற்சியாளரிடம் உடலை பரிசோதனை செய்துகொண்டு, எனக்கு ஏற்ற ஆசனங்கள், தியானம், பிராணயாமம் ஆகியவற்றை செய்து வருவதாகவும், அதனால்தான் மிகவும் நலமாக உணர்வதாகவும் தெரிவித்தார். இதனால்தான் 40 ஆண்டுகளாக நான் யோகா செய்துவந்தாலும், மோடி, பாபா ராம்தேவ் போன்றவர்களின் கும்பலாக யோகா செய்யும் முறையை எதிர்ப்பதாகவும் திக்விஜய் சிங் கூறினார்.