விமான பயணத்தின்போது கத்தியை எடுத்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையில் இருந்து சீக்கியர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆயுதங்கள் மட்டுமின்றி, நகவெட்டி, சிகரெட் லைட்டர் போன்ற பாதகத்திற்கு பயன்படுத்த உதவும் சிறு உபகரணங்களையும் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சீக்கியர்களின் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களுக்கு மட்டும் கத்தியை கொண்டு செல்ல அனுமதி அளித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம், விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் கத்தியின் அளவு 22 புள்ளி 86 சென்டி மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும், 15 புள்ளி 23 சென்டி மீட்டருக்கு மேல் கத்தியின் கூர்மையான பகுதி அமைந்திருக்கக் கூடாது என்ற வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன.