இந்தியா

ஒரே ட்வீட் - கொத்தடிமைகளாகக் கடத்தப்பட்ட 4 சிறுவர்களை மீட்டது ஒடிஷா போலீஸ்

Rasus

ஒடிஷா மாநிலத்தில் பேருந்தில் பயணம் செய்த சாமானியர் போட்ட ட்விட்டர் செய்தியைப் பார்த்து கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை ஒடிசா போலீசார் மீட்டனர்.

ஒடிஷா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் நந்தா என்பவர் சம்பல்பூர் செல்லும் பேருந்தில் நான்கு சிறுவர்கள் வல்லுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் முகவரிக்கு ட்விட்டர் மூலம் புகார் அனுப்பினார். அமித் நந்தாவின் அந்தப் புகாரை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அம்மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு குறிப்பிடப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, புல்பானி என்ற இடத்தின் அருகே நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையையும், புகாரளித்த அமித் நந்தாவையும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டியுள்ளார்.