இந்தியா

மகனுடன் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற தாய் !

மகனுடன் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றிப் பெற்ற தாய் !

Rasus

18 வருடங்களுக்கு முன் 10-ஆம் வகுப்பை கைவிட்ட பெண் ஒருவர் தற்போது தன் மகனுடன் சேர்ந்து 10-ஆம் வகுப்பு தேர்வில் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி முதுலி. தற்போது 36 வயதாகும் அவர் அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 18 வருடங்களுக்கு முன் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில், பெற்றோர் பசந்திக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் பசந்தியின் படிப்பு அத்தோடு தடைபட்டது. குழந்தைகள் பிறந்தாலும் கூட பசந்திக்கு 10-ஆம் வகுப்பை முழுமையாக முடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

இந்த நேரத்தில்தான் அவரது மகன் 10-ஆம் வகுப்புக்கு சென்றார். எனவே மகனோடு இணைந்து தானும் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என பசந்தி முடிவு செய்தார். மகனும் அதற்கு உதவி செய்தார். பள்ளியில் அவனுக்கு சொல்லிக் கொடுப்பதை வீட்டில் வந்து தன் தாயான பசந்திக்கு சொல்லிக் கொடுத்து வந்துள்ளார் அவரது மகன். இதனால் பசந்தி மற்றும் அவரது மகன் என இருவருமே 10-ஆம் வகுப்பு மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பசந்திக்கு 203 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அவரது மகன் 340 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றதை அறிந்த பசந்தி, மகிழ்ச்சியில் கண்கலங்கினார். இனி வேலையிலும் பதவி உயர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பசந்தியின் வெற்றி குறித்து அவரது கணவர் கூறும்போது, அவரது மனைவி மேற்கொண்டு படிப்பை தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.