இந்தியா

“என்னை மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்

“என்னை மந்திரக்காரியாக நினைக்கிறார்கள்” : 20 விரல்களுடன் பிறந்ததால் வருந்தும் பெண்

webteam

காலில் 20 விரல்களுடனும், கையில் 12 விரல்களுடனும் பிறந்த பெண், வாழ்வையே வெறுத்த நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. 

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பிறந்தவர் நாயக் குமாரி (வயது 65). இவர் பிறக்கும்போதே 20 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்களுடன் பிறந்தார். தன் குடும்பத்தின் வறுமை காரணமாக இவரால் மருத்துவ சிகிச்சை பெற இயலவில்லை. இவருக்கு 20 கால் விரல்கள் மற்றும் 12 கை விரல்கள் இருப்பதைக் கண்ட கிராம மக்கள் அவரை மந்திரக்காரி என சிறுவயது முதலே ஒதுக்கி வைத்துள்ளனர். 

அத்துடன் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால் சக மனிதர்களுடன் பழக முடியாமல் ஊரோடு இருக்கும்போது யாரோடும் இல்லாமல் வாழ்கிறார் அந்த மூதாட்டி. 

“கால்-கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களைக் கொண்டவர்களை “பாலிடக்டைலி” என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இது மரபணு பிறழ்வால் ஏற்படுகிறது. 5000 பேரில் ஒன்று அல்ல இரண்டு பேர் இது போன்று பிறப்பார்கள்” என்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர். இதைக்கூட புரிந்துகொள்ளாமல் சக மனிதரை தள்ளி வைத்து வாழும் சமூகம் மாற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.