பிணம் எரிப்பு twitter
இந்தியா

ஒடிசா: சுடுகாட்டில் சிறுமியின் சடலம் எரிந்து கொண்டிருந்தபோதே அதன் மாமிசத்தை சாப்பிட்ட நபர்கள்!

Prakash J

ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டம் பீரேஷ்வர்பூர் பஞ்சாயத்தில் உள்ள தந்துனி கிராமத்தில் வசித்த துனி சிங் என்ற சிறுமி, படாசாஹி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மறுநாள் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

பின்னர், சிறுமியின் உடல் தகனம் செய்வதற்காக அருகில் உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. தகனத்தின்போது அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தர் மோகன் சிங், நரேந்திர சிங் ஆகியோர் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மற்றவர்கள் அந்தச் சுடுகாட்டைச் சுற்றி திரண்டிருக்க, மோகனும் நரேந்திரனும் உடலை முறையாக எரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். உடல் முழுவதும் எரிந்து கொண்டிருந்தபோது, அதில் எரியாத ஒரு சதைப் பகுதியைத் மோகனும் நரேந்திரனும் அதை சிறு துண்டுகளாக வெட்டி மீண்டும் நெருப்பில் வீசியுள்ளனர். ‘அப்படி வீசினால்தான் நன்றாக எரியும்’ எனப் பதிலளித்ததுடன், மீண்டும் அப்பகுதியை எடுத்து வெட்டி எரியும் நெருப்பில் வீசி எறிந்துள்ளனர்.

மீண்டும் அதை எடுத்தபோது, மோகன் அதில் துண்டை மறைத்துள்ளார். பின்னர், 10 நிமிடங்களுக்குப் பின் அந்த துண்டை எடுத்துச் சாப்பிட்டுள்ளார். அதில் ஒரு பகுதியை நரேந்திரனுக்கும் வழங்கியுள்ளார். இருவரும் சாப்பிடுவதைக் கண்டு ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் கோபமுற்ற அவர்கள், அந்த இருவரையும் அடித்துத் துவைத்துள்ளனர்.

இந்தச் செயலால் அவர்கள் பர்சாஹி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோகனும் நரேந்திரனும் அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தாம் என்ன செய்கிறோம் எனத் தெரியாமலேயே இந்தச் செயலைச் செய்துள்ளனர். இத்தனைக்கும் அவகள் இருவரும் இறந்துபோன சிறுமியின் உறவினர்கள்தான்” என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.