mohan charan majhi x page
இந்தியா

ஒடிசா| அரியணையில் ஏறும் பாஜக முதல்வர்.. அரசு இல்லம் தேடும் பணி தீவிரம்!

ஒடிசாவில் புதிதாக ஆட்சி அமைக்கும் முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Prakash J

18வது மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 24 ஆண்டுகளாக அரியணையில் இருந்த பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால், நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாஜக (78 இடங்கள்) ஆட்சியமைக்க இருக்கிறது.

அக்கட்சி சார்பில், அம்மாநிலத்தில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மோகன் சரண் மாஜி முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், ஒடிசாவில் புதிதாக ஆட்சி அமைக்கும் முதல்வருக்கு அரசு இல்லம் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிக்க: சீனாவுக்குப் பதிலடி|திபெத்தில் 30 இடங்களுக்குப் பெயரை மாற்றும் இந்தியா!

கடந்த 24 ஆண்டுகளாக ’நவீன் நிவாஸ்’ என்ற பெயரில் தனது சொந்த வீட்டில் இருந்தபடியே நவீன் பட்நாயக் ஆட்சி செய்தார். இதனால் அரசு இல்லம் என்ற ஒன்று ஒடிசாவில் இல்லை. இதனால் தற்போது பதவியேற்க இருக்கும் புதிய முதல்வர் ஆட்சி செய்ய வீடு அல்லது அதற்குரிய இடம் தேடும் பணிகளை, மாநில நிர்வாகத் துறை மேற்கொண்டுள்ளது.

நவீன் பட்நாயக்

ஆனால், முதல்வர் விரைவில் பதவியேற்கவுள்ளதாலும் அதற்கு நேரமில்லை என்பதாலும், தற்போது உள்ள முதல்வர் குறைகேட்பு அலுவலகத்தை, புதிய முதல்வரின் தற்காலிக இல்லமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:உத்தரப்பிரதேசம்| கட்டணம் கேட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள்.. ஜேசிபியைக் கொண்டு இடித்துத் தள்ளிய ஓட்டுநர்!