இந்தியா

தோட்டத்தில் பூப்பறித்த சிறுமி, ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 40 பட்டியலின குடும்பங்கள்

தோட்டத்தில் பூப்பறித்த சிறுமி, ஊரை விட்டு தள்ளிவைக்கப்பட்ட 40 பட்டியலின குடும்பங்கள்

Veeramani

(கோப்பு புகைப்படம்)

ஒடிசாவிலுள்ள தென்கனல் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 15 வயது சிறுமி மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் பூக்கள் பறித்துள்ளார். இதன் காரணமாக பட்டியலினத்தை சேர்ந்த 40 குடும்பங்களை ஊரைவிட்டே தள்ளிவைத்துள்ளனர் மாற்று சாதியினர்.

கண்டியோ கட்டேனி என்னும் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது, டுமுசிங்கா காவல் நிலைய எல்லையில் நடந்த இந்த சம்பவம் பற்றி சொல்லும் காவல்துறையினர் “ பூக்கள் பறித்ததற்காக 40 குடும்பங்களை ஊரைவிட்டு தள்ளிவைத்துள்ளனர், இவர்களை உள்ளூர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவோ மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோகூட அனுமதிக்கவில்லை” என்றனர். இந்த கிராமத்தில் மொத்தம் 700 குடும்பங்கள் வசிக்கின்றனர், அதில் 40 குடும்பங்கள் பட்டியலினத்தவர்கள்.

பட்டியலினத்தவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிந்தபிறகு அவர்கள் இருதரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின்னர் இப்போது அந்த கிராமத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.