இந்தியா

மருத்துவமனைக்குள் ’டிக்டாக்’ செயலிக்காக டான்ஸ்: 4 நர்சுகளுக்கு கட்டாய விடுப்பு!

மருத்துவமனைக்குள் ’டிக்டாக்’ செயலிக்காக டான்ஸ்: 4 நர்சுகளுக்கு கட்டாய விடுப்பு!

webteam

ஒடிசாவில், மருத்துவமனைக்குள், டாக் டாக் செயலிக்காக நடனம் ஆடி, வீடியோ எடுத்த 4 செவிலியர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவில் உள்ள மால்கங்கரி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிபவர்கள் ரூபி ரே, டபாஸி பிஸ்வாஸ், ஸ்வப்னா பாலா, நந்தினி ராய். இவர்கள் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் பணியாற்றி வருகின்ற னர்.

டிக் டாக் செயலியை அடிக்கடி பார்க்கும் இவர்கள், தாங்களும் பாடலுக்கு ஆடி, வசனங்களுக்கு வாயசைத்து வீடியோ வெளி யிட முடிவு செய்தனர். மருத்துவமனையின் முக்கிய பராமரிப்பு பிரிவில் இருக்கும் அவர்கள், அங்கேயே ஆடிய படி, வீடியோ எடுத்து வெளியிட்டனர். பிறந்த குழந்தைகளைத் தூக்கி வைத்துக்கொண்டும் பாடலுக்கு ஆடி பாடினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதையடுத்து மருத்துவமனையின் முக்கிய பிரிவில் பணியாற்றும் இவர்கள், இப்படி அலட்சியமாக இருந்து கொண்டு டிக் டாக்குக்காக வீடியோ எடுக்கலாமா? என்ற விமர்சனம் எழுந்தது. 

இதுபற்றிய புகார் மருத்துவமனை நிர்வாகத்துக்குச் சென்றது. அந்நிர்வாகம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில் அவர்களை, மருத்துவமனை நிர்வாகம் கட்டாய விடுப்பில் நேற்று அனுப்பியுள்ளது.