இந்தியா

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு

webteam

நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர். 

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

கடந்தாண்டைவிட 2 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு கூடுதலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 19 ஆயிரம் 638 பேர் அரசு வழங்கும் நீட் பயிற்சி மையங்களில் பயிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆவர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு தொடங்கி,  5 மணிக்கு நிறைவுபெறும். கடந்தாண்டைவிட இந்தாண்டு சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 31 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 35 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர்.

ஃபோனி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.