நீட் மறுத்தேர்வு முகநூல்
இந்தியா

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று நீட் மறு தேர்வு!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று மறு தேர்வு நடத்தப்படுகிறது.

PT WEB

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு இன்று மறு தேர்வு நடத்தப்படுகிறது.

நடப்பாண்டு நீட் தேர்வு நடைபெற்றபோது வினாத்தாள் தாமதமாக வழங்கப்பட்டதால் நேரத்தை இழந்த ஆயிரத்து 563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாணவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மறு தேர்வு நடத்த அனுமதி வழங்கியது.

இந்த மறு தேர்வு பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. மறு தேர்வுக்காக 7 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்வு முகமை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் மருத்துவ கவுன்சிலிங் தொடங்கப்படும் நிலையில் மறுத்தேர்வு முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், கருணை மதிப்பெண்கள் இல்லாமல் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

மேகாலயா, சண்டிகர், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள தேர்வு மையங்களில் மறு தேர்வு நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.