இந்தியா

"வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்திய முதலீட்டிற்கு வருமானவரி உண்டு" நிர்மலா சீதாராமன்

"வெளிநாடு வாழ் இந்தியர்களின் இந்திய முதலீட்டிற்கு வருமானவரி உண்டு" நிர்மலா சீதாராமன்

jagadeesh


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்து கிடைக்கும் வருமானத்திற்கு வரி உண்டு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பிப்ரவரி 1ஆம் தேதி வருமான‌வரி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வரி விகிதங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மத்திய நிதியமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கு சம்‌பாதிக்கும் பணத்திற்கு வரி செலுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர், அவர்க‌ள் இந்தியாவில் மேற்கொள்ளும் முதலீடுகளில் கிடைக்கும் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்தஸ்துக்கான நாட்கள் இந்த முறை பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது வரை ஆண்டுக்கு 182 நாட்கள் வெளிநாட்டில் இருந்தால் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எனக் கருதப்படுவார்கள். ஆனால், அடுத்த நிதியாண்டு முதல் 240 நாட்களாவது வெளிநாட்டில் இருந்தால்தான் அவர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களாகக் கருதப்படுவர். இதனால், வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் 120 நாட்‌களுக்கும் மேலாக தாயகத்தில் தங்கிவிட்டால் அவரும் வருமானவரி பிரிவின் கீழ் வந்துவிடுவார் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.