நாட்டில் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் சேவை கிடைக்கும் என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், நாட்டில் உள்ள அனைத்துப் பகுதி மக்களும் எளிதில் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கான சேவை கிடைக்கும் என்று அருண் ஜேட்லி கூறினார்.
இன்றைய பட்ஜெட்டில், தலைமை தபால் நிலையம் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறையை மேலும் எளிமைப்படுத்தியுள்ளது.