மாதிரிப் படம் ட்விட்டர்
இந்தியா

3 மாதங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு.. தமிழகத்தில் எப்படி?

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு நவம்பரில் அதிகரித்துள்ளது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

Prakash J

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு நவம்பரில் அதிகரித்துள்ளது மத்திய அரசின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 5.55 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதுவே முந்தைய அக்டோபர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.87 சதவிகிதமாக இருந்தது. காய்கறி, தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே சில்லறை பணவீக்கம் அதிகரிக்க காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, நவம்பரில் உணவுப் பணவீக்கம் 6.61 சதவிகிதத்தில் இருந்து 8.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சில்லறை பணவீக்கம் 5.85 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 5.26 சதவிகிதமாகவும் உள்ளது.

இதையும் படிக்க: ஷூவில் இடம்பெற்ற வாசகம்.. ஐசிசி எதிர்ப்புக்கு ஆஸ்திரேலிய வீரர் பதில்!

விலைவாசி உயர்வை குறிக்கும் சில்லறை பணவீக்கத்தைக் கொண்டே கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. அந்தவகையில், பணவீக்கத்திற்காக ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள அதிகபட்ச வரம்பான 6 சதவிகிதத்திற்குள்ளாகவே சில்லறை பணவீக்கம் உள்ளது. அதிகளவாக ஒடிசாவில் சில்லறை பணவீக்கம் 7.65 சதவிகிதமாகவும், குறைந்த அளவாக டெல்லியில் 3.1 சதவிகிதமாகவும் உள்ளது. பீகார், கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சில்லறை பணவீக்கம் 6 சதவிகிதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”இந்திய அளவில் பணவீக்கம் 5.55 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் தேசிய சராசரியைவிடவும் குறைவாக 4.97 சதவீதமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பள்ளியில் நிர்வாண ஓவியத்தைக் காட்டிய ஆசிரியர்; முகம்சுளித்த குழந்தைகள்.. பிரான்சில் மற்றொரு சம்பவம்!