குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச தேர்தலில் சுமார் 6 லட்சம் வாக்குகள் நோட்டாவில் பதிவாகியுள்ளன.
குஜராத் மற்றும் ஹிமாச்சலில் நடந்த தேர்தல் வாக்குப் பதிவுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்களுக்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் ’நேட்டா’ என்ற பட்டன் உள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் ’நேட்டோ’வில் கணிசமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
குஜராத் தேர்தலில் 1.8 சதவிகித வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். அதாவது, 5 லட்சத்து 51ஆயிரத்து 615 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். இது, பா.ஜ.க., காங்கிரஸ், சுயேச்சைகளுக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் ஹிமாச்சலில், 34ஆயிரத்து 232 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளனர். இதன் சதவிகிதம் 0.9 ஆகும்.