இந்தியா

காலணியால் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி விமானத்தில் பறக்க தடை

காலணியால் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.பி விமானத்தில் பறக்க தடை

webteam

ஏர் இந்தியா நிறுவன ஊழியரை காலணியால் தாக்கிய சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவசேனா கட்சி எம்.பியான ரவீந்திர கெய்க்வாட், விமானத்தில் சொகுசு வகுப்பு இருக்கை தரவில்லை என கூறி 60 வயதான ஏர் இந்திய ஊழியரை காலணியால் அடித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து, எம்.பி ரவீந்திர கெய்க்வாட்டை விமானத்தில் அனுமதிக்க இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனமும் ரவீந்திர கெய்க்வாட்டை விமானத்தில் ஏற்றப்போவதில்லை என கூறியுள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் விமானத்தில் பயணிப்பதற்கு ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் தடை விதித்தது சட்டப்பூர்வமாக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விமான ஊழியரை தாக்கியதற்காக மன்னிப்பு கோர சிவசேனா எம்.பி மறுத்துவரும் சூழலில், பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது.