என்.டி.ஏ. கூட்டணி எக்ஸ் தளம்
இந்தியா

முஸ்லிம் To பெளத்தம்: 4 மதங்களில் இருந்து பாஜக கூட்டணியில் 1 எம்.பி கூட இல்லை! முடிவுகள் ஓர் அலசல்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இஸ்லாம், கிறிஸ்தம் சீக்கியம், பெளத்தம் என எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படவில்லை என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Prakash J

18வது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மைக்கான இடங்களை பாஜக கைப்பற்றாததால், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஆதரவை ஆந்திராவின் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவும், பீகாரின் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரும் வழங்கியுள்ளனர். இதையடுத்து, பிரதமராக மோடி மீண்டும் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இஸ்லாம், கிறிஸ்தம் சீக்கியம், பெளத்தம் என எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படவில்லை என தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதையும் படிக்க: அக்னிவீர் திட்டத்திற்கு ஆப்பு.. ஆட்டத்தைத் தொடங்கிய நிதிஷ்குமார்.. அழுத்தத்தில் பாஜக தலைவர்கள்!

தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியில் 0.9% இஸ்லாமியர்கள் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டும் ஒருவரும் தேர்வாகவில்லை. இதேபோல், கிறிஸ்தவ மற்றும் பெளத்த வேட்பாளர்கள் 0.2% நிறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை. அடுத்து சீக்கியர்களில் 0.4% வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களிலும் யாரும் வெற்றிபெறவில்லை.

இதனால், இந்த நான்கு மதங்களிலிருந்தும் பாஜக கூட்டணி எந்த வேட்பாளர்களையும் பெறவில்லை. ஆனால், I-N-D-I-A கூட்டணி பரவலான வேட்பாளர்களைப் பெற்றுள்ளது. முஸ்லீமில் 7.9 சதவிகிதத்தையும், கிறிஸ்தவர்களில் 3.5 சதவிகிதத்தையும், சீக்கியர்களில் 5.0 சதவிகிதத்தையும் வேட்பாளர்களாகப் பெற்றுள்ளது. அதேநேரத்தில், அக்கூட்டணி பெளத்தத்தில் எந்த வேட்பாளர்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களையும் புறக்கணித்துவிட்டு 140 கோடி மக்களின் பிரதிநிதிகள் என்று பாஜக உரிமை கோரும் என்று விமர்சித்துள்ளார் ஒமர் அப்துல்லா.

இதையும் படிக்க: “விவசாயிகள் ரூ.100-க்கு போராடுறாங்களா?” - கங்கனா அறையப்பட்ட விவகாரத்தில் பெண் காவலர் சொன்ன விளக்கம்!