NMC pt desk
இந்தியா

‘முதன்மை பாடமாக உயிரியல் எடுக்காதவர்களும் மருத்துவம் படிக்க வாய்ப்பு!’ - தேசிய மருத்துவ ஆணையம்

12ஆம் வகுப்பில் உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம் என்ற புதிய நடைமுறையை தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

webteam

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள மருத்துவப் படிப்பு வழிமுறைகளில், உயிரியல் படிப்பு இல்லை என்றாலும் அறிவியல் குரூப்பில் இயற்பியல், வேதியியல் கணிதம் படித்து தேர்வானவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

doctor

கூடுதலாக உயிரியல் அல்லது உயிரி தொழில்நுட்ப பாடங்களில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் தனியாக தேர்வு எழுதி வெற்றி பெற்றிருந்தால் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தகுதித் தேர்வை எழுத அனுமதி அளிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய உத்தரவின்படி, உயிரியல் பாடத்தை முதன்மை பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது.